மகிமை மாட்சிமையும் எங்கள்

மகிமை மாட்சிமையும் எங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மகிமை மாட்சிமையும்

            எங்கள் பிதாவின் நாமத்திற்கே

            ஸ்தோத்திர ஆராதனை

            எங்கள் இயேசு ராஜாவுக்கே

            ஸ்தோத்திர ஆராதனை ஆவியான தேவனுக்கே

 

                        வாருங்கள் வணங்கிடுவோம்

                        வாழ்வை உயரச் செய்தார்

                        நன்றி சொல்லி பாடிடுவோம்

                        நல்லவர் நன்மை செய்தார்

 

1.         பாவத்தின் பிடியில் கிடந்தேனே

            பலநாள் வியாதியால் தவித்தேனே

            பாவத்தின் சம்பளம் மரணமே

            பரிசுத்தர் உம்மால் விடுதலையே

 

2.         உலகம் மாயை என்றறிந்தேனே

            உம் கிருபை தேவை என்றுணர்ந்தேனே

            நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள

            நின் பாதம் விழுந்து முத்தமிட்டேன்

 

3.         வேதமே வெளிச்சம் என் வாழ்வினிலே

            வேண்டுகிறேன் ஜனம் உம்மை அறிய

            சந்திப்பேன் நடுவானில் மீட்பரையே

            சந்தோஷம் மோட்சத்தில் அவருடனே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே