பொய் சொல்ல தேவன் மனுஷன் அல்லவே

பொய் சொல்ல தேவன் மனுஷன் அல்லவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பொய் சொல்ல தேவன் மனுஷன் அல்லவே

            மனம் மாற மனுஷ புத்திரனும் அல்ல அல்லவே

 

                        அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ

                        வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ

 

1.         அவர் உண்மையுள்ளவர்

            அவர் உயர்ந்த அடைக்கலம் (2)

            இரவும் பகலும் விழித்திருந்து

            கண்மணி போல காப்பார்- பொய்

 

2.         அவர் நீதியுள்ளவர்

            உன்னில் நியாயம் செய்வாரே (2)

            உள்ளங்கையில் உன்னை வரைந்து

            மறைத்து காத்திடுவார் - பொய்

 

3.         இயேசு இரக்கமுள்ளவர்

            மனம் இரங்கி மீட்பாரே (2)

            ஆபத்துக் காலத்தில் அரணான

            கோட்டையும் கேடகம் துணையும் அவர் - பொய்

 

4.         இயேசு அன்பு உள்ளவர்

            அவர் ஆறுதல் நாயகன் (2)

            கிருபையாக உடன்படிக்கையை

            உன்னில் நிறைவேற்றுவார் - பொய்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே