போற்றிடுவாய் மனமே நீ பரனைப்
278.
இராகம்: எதுகுலகாம்போதி ஆதி தாளம்
பல்லவி
போற்றிடுவாய்,
மனமே, நீ பரனைப்
போற்றிடுவாய்,
மனமே, தினம்
சரணங்கள்
1. நாற்றிசையோர்
பணிந்தேற்றிய
நேசன்
வீற்றிருக்குமே
கன[1]
காசன வாசன்
- போற்
2. ஞாலமெலாங்
கிறிஸ்தேசுவை
நாடும்;
பாலகக்
குழந்தைகள் வாய்
துதி பாடும் - போற்
3. நாட்கள்
பொல்லாததால்
ஞானமாய் நடந்து
மீட்பராம்
யேசுவின்
நாமமே பணிந்து
- போற்
4. எஜமான்
வரும் நாழிகை அறிவோர்கள்
நிஜமே பரகதி
வீடடைவார்கள்
- போற்
- ஜி.
ஆசீர்வாதம்
YouTube Link
Comments
Post a Comment