போற்றியே வாழ்த்துங்கள் புதிய பாடல்

போற்றியே வாழ்த்துங்கள் புதிய பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   போற்றியே வாழ்த்துங்கள்

                      புதிய பாடல் முழங்கியே

                        ஆர்ப்பரித்து என்றும் பாடுங்கள்

                        ஆவியில் நிறைந்து நம்

                        ஆண்டவர் புகழ் சொல்லி அல்லேலூயா

                        என்று போற்றுங்கள் அல்லேலூயா - 8

 

1.         கானங்கள் பாடியே

            கர்த்தரை கொண்டாடுங்கள்

            கரங்கள் தட்டி அவரைப் போற்றுங்கள்

            மகிமையுள்ள தேவனாம்

            மகத்துவமுள்ள ராஜனாம்

            மன்னன் இயேசு நாமம் போற்றுங்கள்

 

2.         மாறாத அன்பினாலே

            நம்மை கட்டி இழுத்தவர்

            மரணத்தாலே நம்மை மீட்டவர்

            ஆவியை பொழிந்து நம்

            பாவங்கள் ஒழித்திட்டார்

            புதிய சாயலாக மாற்றினார்

 

3.         சாத்தானின் அதிகாரத்தை

            சிலுவையில் ஜெயித்தவர்

            சாவை வென்று உயிர்த்தெழுந்தவர்

            நித்திய வாழ்வை நாம் பெற

            சத்திய பாதை காட்டியே

            செட்டை கொண்டு நம்மை சுமப்பவர்

 

4.         வானத்தை பூமியை

            வார்த்தையால் படைத்தவர்

            வல்ல தேவன் என்னில் வாழ்கிறார்

            காலத்தை வென்றவர் ஞானமுடையவர்

            கண்மணி போல் என்னை காக்கின்றார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே