மகிமை தேசமே எந்தனின் சொந்தமே

மகிமை தேசமே எந்தனின் சொந்தமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மகிமை தேசமே எந்தனின் சொந்தமே

                        விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன் - 2

 

1.         என்னையும் தேடி அன்பாக வந்தவர்

            தன்னையும் பூவில் அன்பாக தந்தவர் - 2

            எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன்

            ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன் - (2) - மகிமை

 

2.         தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே

            தேவனின் சேவை எந்நாளும் செய்திட - 2

            தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே

            தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன் - (2) - மகிமை

 

3.         உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே

            என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன் - 2

            தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்

            எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன் - (2) - மகிமை

 

4.         வேதத்தின் சத்தியம் எந்நாளும் ஏற்றுமே

            ஜீவியம் காத்து என்றென்றும் செல்லுவேன் - 2

            சுத்தாங்கம் விளங்க கர்த்தாவை சேருவேன்

            எந்நாளும் மகிமையை செலுத்திடுவேன் - (2) - மகிமை

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே