பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை

பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பொன்னான இயேசுவை புண்ணிய நல் நேசரை

            கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்

            அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் - 2

 

                        தேவனே நம்மை நடத்திடுவார்

                        தேவை அறிந்து பயன்படுத்திடுவார் - 2

 

1.         அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால்

            அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை - 2

            அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் - (2)

            அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் (நாம்) - (2) - பொன்னான

 

2.         அவர் எலியா எலிசா மூலம் அற்புதம் செய்தார்

            இந்த நாளில் எங்கள் மூலம் நிச்சயம் செய்வார் - 2

            எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும் - (2)

            இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் (நாம்) - (2) - பொன்னான

 

3.         காலமும் கடல் அலையும் காத்திருக்காது

            உள்ள காலத்தில் உலகை கலக்கிடுவோம் - 2

            கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும் - (2)

            கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் (நாம்) - (2) - பொன்னான

 

 

- Pas. Ravi Robert

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே