12 August 2025

பொல்லா உலகில் நல்லோர் இல்லை

பொல்லா உலகில் நல்லோர் இல்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பொல்லா உலகில் நல்லோர் இல்லை

            நீயோ மகனே அழைக்கப்பட்டாய்

            சீக்கிரம் வருவேன் மறவாதே

            நீயோ மகளே அழைக்கப்பட்டாய்

 

                        மற்றோரை ஆயத்தம் செய்

                        அதற்கே மகனே அழைக்கப்பட்டாய்

                        மற்றோரை ஆயத்தம் செய்

                        அதற்கே மகளே அழைக்கப்பட்டாய் - 2

 

1.         முந்தினோர் அநேகர் பிந்துகிறார்

            நீயோ மகனே அழைக்கப்பட்டாய்

            முடிவு பரியந்தம் போராட

            நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை

 

2.         அப்போஸ்தலர் என்ற வரிசையில்

            நீயோ மகனே அழைக்கப்பட்டாய்

            சுவிசேஷ பணியில் முன் நிற்க

            நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை

 

3.         தெபோராளின் கிராமங்கள் அதிகமே

            நீயோ மகனே அழைக்கப்பட்டாய்

            நினிவே பட்டணங்கள் பல உண்டே

            நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை

 

4.         உன்னால் இயன்றதை செய்து விடு

            நீயோ மகனே அழைக்கப்பட்டாய்

            உன்னுடன் நான் உண்டு முயன்றிடு

            நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை

 

5.         நாளை நாளை என்றோர் பெற்றதில்லை

            நீயோ மகனே அழைக்கப்பட்டாய்

            இன்றே இன்றே என்று கிரீடம் பெறு

            நீயோ மகளே அழைக்கப்பட்டாய் - மற்றோரை

 

 

Dr. N. Emil Jebasingh

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...