பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
பேர்
சொல்லி அழைத்த
உன் தேவன்
அவர்
உண்மையுள்ளவர்
- 2
உன் தலையை
உயர்த்துவார்
உன்னை
மேன்மைப்படுத்துவார்
- 2
1. மலைகளெல்லாம்
உந்தன் வழிகளாகும்
உந்தன்
பாதைகள் உயர்த்தப்படும்
- 2
வாலாக்காமல்
உன்னை தலையாக்குவார்
கீழாக்காமல்
உன்னை மேலாக்குவார்
- 2 - உன் தலையை
2. நீதியின்
வலக்கரத்தாலே
உன்னை நித்தமும்
நடத்திடுவார்
- 2
கால்வைக்கும்
தேசத்தை சுதந்தரிப்பாய்
இன்ப கானானுக்குள்
நீ பிரவேசிப்பாய்
- 2 - உன் தலையை
3. கர்த்தரே
உந்தன் மேய்ப்பராவார்
உன் கண்ணீரை
துடைத்திடுவார்
- 2
புல்லுள்ள
இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த
தண்ணீரண்டை நடத்திடுவார்
- 2 - உன் தலையை
4. கரம்பற்றி
நடத்தும் கர்த்தரவர்
உன் கவலைகள்
போக்கிடுவார்
- 2
தாயைப்
போல் உன்னைத் தேற்றிடுவார்
தாபரமாய்
உன்னை அணைத்திடுவார்
- 2 - உன் தலையை
YouTube Link
Comments
Post a Comment