15 August 2025

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பொற்பரன்

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம் பொற்பரன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

                        பொற்பரன் இயேசுவையே

                        புவியில் அவர் போல் வேறில்லையே - (2)

 

1.         தந்தையைப் போல் தோளினிலே

            மைந்தரெமைச் சுமந்தவரே

            எந்நாளுமே அவர் நாமமே

            இந்நிலத்தே நான் துதித்திடுவோம் - போற்றிடுவோம்

 

2.         கன மகிமை புகழடைய

            கருணையால் ஜெநிப்பித்ததாலே

            கனலெரியின் சோதனையில்

            கலந்கிடுமோ எம் விசுவாசமே - போற்றிடுவோம்

 

3.         ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க

            ஆவியின் அபிஷேகத்தாலே

            ஏக சரீரமாய் நிறுத்த

            இணைத்தனரே நம்மைத் தம் சுதராய் - போற்றிடுவோம்

 

4.         ஆதி அப்போஸ்தல தூதுகளால்

            அடியாரை ஸ்திரப்படுத்தி

            சேதமில்லா ஜெயமளித்தே

            கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே - போற்றிடுவோம்

 

5.         சீயோனே மா சாலேம் நகரே

            சீரடைந்தே திகழ்வாயே

            சேவிப்பாயே உன் நேசரையே

            சிறப்புடனே இப்பார்தலத்தை - போற்றிடுவோம்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...