பொன்னாய் இலங்கும் காலையும்
1. பொன்னாய்
இலங்கும்
காலையும்
விண் காந்தியும்
ஒழிந்ததே
திரும்ப
மாலை நிழலும்
படர்ந்ததே.
2. வாழ்நாளின்
காலை நேரமும்
மத்தியானமும்
மறையுமே
கர்த்தாவே
அந்திப்பொழுதும்
நடத்துமே.
3. விண் வீட்டை
நாங்கள் நாடவே
உம் அருள்
நெஞ்சில் ஊற்றிடும்
பொன்நகர்
நாங்கள் சேரவே
துணை செய்யும்.
4. அங்கே குன்றாத
ஜீவனும்
ஒளியும்
தங்கும் நித்தமாய்
விண்ணோரின்
கீதம் முழங்கும்
ஓயாததாய்.
5. ராநிழலோ
அங்கில்லையாம்
தூயோர்
வெள்ளங்கி
தரிப்பார்
ஜோதியில்
ஜோதி தேவன்
தாம்
அரசாள்வார்.
Comments
Post a Comment