பேசுங்கப்பா
எங்களோடு பேசுங்கப்பா
நீங்க
பேசினா எங்க
வாழ்க்கை மாறும்
- 2
துதிக்கணும்பா
ஜெபிக்கணும்பா
உம் நாமம்
உயர்த்தணும்பா
- 2
1. பகல் முழுவதும்
உங்க பாதபடியில
என் கண்ணீர்
வடிக்கணும்பா
- 2
இரா முழுவதும்
தியானம் செய்து
பாக்கியவானாய்
மாற்றுங்கப்பா
- (2) - துதிக்கணும்பா
2. ஒவ்வொரு
நாளும் பெலனடைந்து
ஆவியில்
நிறையணும்பா
- 2
பெலத்தின்மேல
பெலனடைந்து
சீயோன
பார்க்கணும்பா
- (2) - துதிக்கணும்பா
3. பரிசுத்தத்தில்
மகத்துவமுள்ள
தேவாதி
தேவன் நீரே - 2
பரிசுத்தமாய்
வாழ்ந்திடவே
உங்க கிருபையினால்
நிரப்புங்கப்பா
- (2) - துதிக்கணும்பா
4. உண்மையான
ஊழியனாய்
அனுதினமும்
விளங்கணும்பா
- 2
நன்மைகள்
செய்யணும்
நாள்தோறும்
உம்ம பாக்கணுமே
- (2) - துதிக்கணும்பா
- Pastor. Lucas Sekar
No comments:
Post a Comment