மகிமை உமது மகத்துவம் உமது

மகிமை உமது மகத்துவம் உமது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மகிமை உமது மகத்துவம் உமது கிருபையும் உமது

            புகழும் உமது மாட்சிமை உமது வல்லமை உமது

 

                        நீர் நல்லவர் நீர் வல்லவர்

                        நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர் - 2

                        துதிகள் நடுவில் வசிக்கும் தேவன்

                        தூயர் தூயவர் - 2

 

1.         ஒளியை உடையாய் தரித்தவர்

            ஒருவராய் அற்புதம் செய்பவர்

            வலிமை நிறைந்த கரத்தினால்

            பெரிய காரியம் செய்பவர் - 2

            நீர் பெரியவர் நீர் பரிசுத்தர் - (2)

            என்றென்றும் வாழ்பவர் - மகிமை

 

2.         மரண குழியில் இருந்தென்னை

            மகிமை அடைய உயர்த்துவீர்

            கருணை நிறைந்த கரங்களால்

            தினமும் என்னை நடத்துவீர் - 2

            கனம் மகிமையை தினம் செலுத்துவேன் - (2)

            கானங்கள் பாடுவேன் - மகிமை

 

3.         காற்றினை ரதமாய் கொண்டவர்

            காலங்களை கடந்தவர்

            வானத்தில் சிங்காசனம் கொண்டு

            பூமியில் பாதம் பதிப்பவர் - 2

            தூதர் பாடிடும் தூயவர் தூயவர் - (2)

            என்றென்றும் வாழ்பவர் - மகிமை

 

 

- Vincent Selvakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே