12 August 2025

பொருட்கள் மேலே கண்ணு போச்சுனா

பொருட்கள் மேலே கண்ணு போச்சுனா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          பொருட்கள் மேல கண்ணு போச்சுனா

            போச்சய்யா உன் அபிஷேகம்

            ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னா

            அம்போ தான் உன் அபிஷேகம் - 2

                        காத்துக்கொள் காத்துக்கொள்

                        பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக்கொள்

1.         பெருமை என்ற வலையில் விழாதே

            அது வறுமையைக் கொண்டு வந்திடும் - 2

            பணத்திலே மயங்கி விடாதே - உன்னை

            பாதாளம் கொண்டு போய்விடும் - 2 - காத்துக்கொள்

2.         அழிந்து போகும் உலகப் பொருட்களால்

            நண்பர்களை சம்பாதித்துக் கொள் - 2

            நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)

            நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள் - 2 - காத்துக்கொள்

3.         அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் - நீ

            அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம் - 2

            அழைத்தவர் உண்மையுள்ளவர் - உன்னை

            அனுதினமும் நடத்திச் செல்வாரே - 2 - காத்துக்கொள்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...