22 December 2018

சரணம் சரணம் அனந்தா-2


சரணம் சரணம் அனந்தா

50. (85) நீலாம்புரி                      திஸ்ர ஏகதாளம்

பல்லவி
            சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
            தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
 1.         பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
            பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். - சரணம்‌

2.         கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்
            காவலன்[1] தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். - சரணம்‌

3.         முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
            மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். - சரணம்‌

4.         கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,
            காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார். - சரணம்

 5.        துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,
            துன்னிய[2] கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார். - சரணம்‌

6.         முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
            முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார். - சரணம்

- வே. சாஸ்திரியார்


[1]. அரசன்
[2]. கெட்டியான

சரணம் சரணம் அனந்தா-1


சரணம் சரணம் அனந்தா

49. (95) நீலாம்புரி                                திஸ்ர ஏகதாளம்

பல்லவி
            சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,[1]
            தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
1.         தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே,
            சென்று பல பாடுபடவும் தயவானார்.- சரணம்

2.         தந்து[2] செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்,
            தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான். - சரணம்

3.         பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி,
            பாதகனை யோ? இறையை யோ? விட, என்றான். - சரணம்

 4.        ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று,
            திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார். - சரணம்

 5.        தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே,
            தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக்கொடுத்தான். - சரணம்

 6.        கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக,
            காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான். - சரணம் 
- வே. சாஸ்திரியார்


[1]. சத்து, சித்து, ஆனந்தம் என்னும் இறைநிலை
[2]. தந்திரம்

பொற்பு மிகும் வானுலகும்


காரணமேன் கோவே

48. (94) நீலாம்புரி                                          ரூபகதாளம் 
தரு 
சீயோன் 1        பொற்பு[1] மிகும் வானுலகும்
                        பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே
                        பொந்திப்பிலாத் தரண்மனையில்
                        வந்து நிற்கும் காரணமேன், கோவே?

கிறிஸ்து          கற்பனை மீறிய பாவத்தால்
                        கடின நரகாக்கினைப் படாமல்-உன்னைக்
                        காப்பதற் கிங்கே ஞாய‌
                        தீர்ப்பில் உற்றோம், சீயோனின் மாதே.

சீயோன் 2       துய்ய திரு மேனி எல்லாம்
                        நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்‌
                        சோரி[2] சிந்த, வாரதினால்
                        நீர் அடிக்கப்பட்டதென்ன, கோவே?

கிறிஸ்து          வையகத்தின் பாதகத்தால்
                        பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற,-இந்த‌
                        வாதை எல்லாம் பட்டிறக்க‌,
                        போத[3] மனம் சம்மதித்தோம், மாதே.

சீயோன் 3       செய்ய[4] கண்கள் உறச் சிவந்து,
                        திருக் கன்னங்கள் தடித்து, மிக வீங்கி,-முழுச்
                        சென்னியின் ரோமங்கள் எல்லாம்
                        வின்னமுற்றிங்[5] கிருப்பதென்ன, கோவே?

கிறிஸ்து        மையிருளில் குருக்களுடை
                        மாளிகையில் படுத்தின பாடெல்லாம்-இங்கே
                        வன் கொலைஞரால் அடிக்க‌,
                        பங்கமுற்ற கோலம் இது, மாதே 
- வே. சாஸ்திரியார்


[1]. அழகு
[2]. இரத்தம்
[3]. பூரணமாய்
[4]. அழகான
[5]. சிதைவு

அப்பா தயாள குணாநந்த

கி.கீ:47

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             அப்பா தயாள குணநந்தா மோனந்த வேதா

 

47. (92) நாதநமக்கிரியை                                சாபுதாளம்

 

                             கண்ணிகள்

 

1.       அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா

            இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?

 

2.         குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்

            செற்றலர்[1] எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ?

 

3.         கன்னம் அதைத்ததோ?[2] கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி

            மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன்னேமி?[3]

 

4.         மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்

            பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே.

 

5.         என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்

            பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ?

 

6.         இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே,-என்றன்

            கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே?

 

7.         நீர் பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே?-பல

            கார்பட்ட[4] நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே.

 

 

- ஏசுதாசன் அண்ணாவியார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு



[1] பகைவர்

[2] வீங்கியதோ

[3] கருணைக்கடல்

[4] இருளடைந்த - பாவ இருள்

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...