07 July 2018

சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார்


கண்ணிகள்

1.       சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி
            தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ!

2.         உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில்
            உறங்குவதும் சுகமாச்சுதோ - மகனே ஆ! ஆ!

3.         ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
            அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ - மகனே ஆ! ஆ!

4.         பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட
            பாங்குதனில் நித்திரையானீரோ - மகனே ஆ! ஆ!

5.         ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
            அம்புவியால் வெம்பினேனே - மகனே ஆ! ஆ!

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...