07 July 2018

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு


பல்லவி

                   புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு
                        பெரு வாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு

1.         பிறந்தவர் இறப்பது பொது மரபு - இங்கு
            இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு
            இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் - கொடும்
            மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார்

2.         கல்லறை உலகினில் பல உண்டு - அவை
            சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு
            வல்லவர் இயேசுவின் கல்லறையோ - அவர்
            இல்லையே என்னிடம் என்றிடுதே

3.         இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி - அவர்
            நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி
            நாசமோ மோசமோ நமக்கில்லை - விசு
            வாசிகள் தமக்கு இறப்பில்லை

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...