Posts

Showing posts from 2018

சரணம் சரணம் அனந்தா-2

சரணம் சரணம் அனந்தா 50.   (85) நீலாம்புரி                        திஸ்ர ஏகதாளம் பல்லவி                சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,             தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள்   1.          பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,             பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். - சரணம்‌ 2.          கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்             காவலன் [1] தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். - சரணம்‌ 3.          முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,             மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். - சரணம்‌ 4.          கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,             காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார். - சரணம்   5.         துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,             துன்னிய [2] கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார். - சரணம்‌ 6.          முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,             முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார். - சரணம் - வே. சாஸ்திரியார் [1] . அரசன் [2] . கெட்டி

சரணம் சரணம் அனந்தா-1

சரணம் சரணம் அனந்தா 49. (95) நீலாம்புரி                                திஸ்ர ஏகதாளம் பல்லவி               சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, [1]             தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள் 1.          தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே,             சென்று பல பாடுபடவும் தயவானார்.- சரணம் 2.          தந்து [2] செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்,             தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான். - சரணம் 3.          பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி,             பாதகனை யோ? இறையை யோ? விட, என்றான். - சரணம்   4.         ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று,             திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார். - சரணம்   5.         தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே,             தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக்கொடுத்தான். - சரணம்   6.         கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக,             காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான். - சரணம்   - வே. சாஸ்திரியார் [1] . சத்து, சித்து, ஆனந்தம் என்னும் இறைநிலை [2] . தந்திரம்

பொற்பு மிகும் வானுலகும்

காரணமேன் கோவே 48. (94) நீலாம்புரி                                           ரூபகதாளம்   தரு   சீயோன் 1          பொற்பு [1] மிகும் வானுலகும்                         பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே                         பொந்திப்பிலாத் தரண்மனையில்                         வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து           கற்பனை மீறிய பாவத்தால்                         கடின நரகாக்கினைப் படாமல்-உன்னைக்                         காப்பதற் கிங்கே ஞாய‌                         தீர்ப்பில் உற்றோம், சீயோனின் மாதே. சீயோன் 2        துய்ய திரு மேனி எல்லாம்                         நொய்ய உழுத நிலம்போல ஆகி,-உன்‌                         சோரி [2] சிந்த, வாரதினால்                         நீர் அடிக்கப்பட்டதென்ன, கோவே? கிறிஸ்து          வையகத்தின் பாதகத்தால்                         பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற,-இந்த‌                         வாதை எல்லாம் பட்டிறக்க‌,                         போத [3] மனம் சம்மதித்தோம், மாதே. சீயோன் 3        செய்ய [4] கண்

அப்பா தயாள குணாநந்த

அப்பா தயாள குணநந்தா மோனந்த வேதா 47. (92) நாதநமக்கிரியை                                 சாபுதாளம் கண்ணிகள் 1.           அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா             இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா? 2.          குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்             செற்றலர் [1] எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 3.          கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி             மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 4.          மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்             பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே. 5.          என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்             பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ? 6.          இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே,-என்றன்             கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே? 7.          நீர் பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே?-பல             கார்பட்ட [2] நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே. - ஏசுதாசன் அண்ணாவிய

ஆதம்புரிந்த பாவத்தாலே

சிறை விடுத்தீரோ, பரனே   46. (34 L) சகானா                                           ஆதி தாளம் கண்ணிகள் 1.           ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி             வேதம் [1] புரிந்த சிறை விடுத்தீரோ பரனே. 2.          ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்             பாவத்துக்காகப் பழியானீரோ பரனே. 3.          வேத கற்பனையனைத்தும் மீறி நரர் புரிந்த             பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே. 4.          தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து             மைந்தரை [2] மீட்க மனம் வைத்தீரோ பரனே. 5.          சிலுவைச் சுமைபெறாமல் தியங்கித் தரையில் விழக்             கொலைஞர் அடர்ந்து கோட்டிகொண்டாரோ பரனே? 6.          வலிய பவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்             சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே? 7.          சென்னியில் தைத்தமுடிச் சிலுவையின் பாரத்தினால்             உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே? 8.          வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்             கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே? 9.          வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மை

புண்ணியன் இவர் யாரோ

புண்ணியன் இவர் யாரோ? 45. கேதாரகௌனம்                                        ஆதிதாளம் பல்லவி                    புண்ணியன் இவர் யாரோ?-வீழ்ந்து ஜெபிக்கும்                    புருஷன் சஞ்சலம் யாதோ? அனுபல்லவி            தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே,            மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும்.-புண் சரணங்கள்   1.          வேளை நீங்காதோ வென்கிறார்;-கொடுமரண             வேதனை யுற்றேனென்கிறார்;             ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார்;             நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார். - புண் 2.          பாத்திரம் நீக்கு மென்கிறார்;-பிதாவே, இந்தப்             பாடகலாதோ வென்கிறார்;             நேத்திரம் நீர்பொழிய நிமலன் மேனியில் ரத்தம்             நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் - புண் 3.          என்சித்த மல்ல வென்கிறார்;-அப்பா, நின்சித்தம்             என்றைக்குமாக வென்கிறார்;             அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த             துன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும். - புண் - ல.ஈ.

ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் 44. (91) செஞ்சுருட்டி                                               ஆதி தாளம் பல்லவி                     ஏன் இந்தப் பாடுதான்!-சுவாமி                     என்ன தருவேன் இதற் கீடுநான்? அனுபல்லவி       ஆனந்த நேமியே [1] - எனை ஆளவந்த குரு சுவாமியே   - ஏன் சரணங்கள் 1.         கெத்செமனே யிடம் ஏகவும்,-அதின்             கெழு [2] மலர்க் காவிடை போகவும்,             அச்சயனே, மனம் நோகவும்,-சொல்             அளவில்லாத் துயரமாகவும், - ஏன் 2.          முழுந்தாள் படியிட்டுத் தாழவும்,-மும்             முறை முகம் தரைபட விழவும்,             மழுங்கத் துயர் உமைச் சூழவும்,-கொடு             மரண வாதையினில் மூழ்கவும், - ஏன் 3.          அப்பா, பிதாவே, என்றழைக்கவும்,-துயர்             அகலச் செய்யும், என்றுரைக்கவும்,             செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும்,-ஒரு             தேவதூதன் வந்து தேற்றவும், - ஏன் 4.          ஆத்துமத் துயர் மிக நீடவும்,-குழம்             பாக உதிர வேர்வை ஓடவும்,             சாத்திர மொழிகள் ஒத்தாடவும்,-

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

ஓசன்னா பாடுவோம் 43. சங்கராபரணம்                                          ஆதி தாளம் பல்லவி                      ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,                     உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா! சரணங்கள் 1.          முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,             அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம். 2.          சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்             இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார். 3.          பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,             பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார். 4.          பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,             ஜாலர் வீணையோடுபாடித் தாளைமுத்தி செய்குவோம். 5.          குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,              கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம். - யோ. பால்மர்

பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராஜா 42. யமுனா கல்யாணி                              ரூபக தாளம் பல்லவி                          பவனி செல்கின்றார் ராசா-நாம்                         பாடிப் புகழ்வோம், நேசா! அனுபல்லவி                             அவனிதனிலே மறி [1] மேல் ஏறி                         ஆனந்தம் பரமானந்தம். - பவனி சரணங்கள்   1.          எருசலேமின் பதியே [2] -சுரர்             கரிசனையுள்ள நிதியே!             அருகில் நின்ற அனைவர் போற்றும்             அரசே, எங்கள் சிரசே! - பவனி 2.          பன்னிரண்டு சீஷர் சென்று-நின்று             பாங்காய் வஸ்திரம் விரிக்க,             நன்னயம்சேர் மனுவின் சேனை             நாதம் கீதம் ஓத. - பவனி 3.          குருத்தோலைகள் பிடிக்க,-பாலர்             கும்புகும்பாகவே நடக்க,             பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று             போற்ற மனம் தேற்ற. - பவனி [1] . கழுதைக் குட்டி [2] . மணவாளன்

ஜகநாதா குரு பரநாதா

ஜகநாதா குருபர நாதா 41. (88, 89) சங்கராபரணம்                              ஆதிதாளம் பல்லவி                           ஜகநாதா, குரு பரநாதா, திரு                         அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! அனுபல்லவி                         திகழுறுந் [1] தாதா, புகழுறும் பாதா,                         தீதறும் வேத போதா! - செக சரணங்கள் 1.          முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர             மொய் [2] கொண்டு கனியுண்ட பழியாலோ?             நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,             நரதேவனாக வந்தாய் மொழியாலோ? - ஜகநாதா 2.          எளிய வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,             இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;             ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி             உடு [3] வழி காட்டிடப் புரிந்தாயே. - ஜகநாதா 3.          அருந் தவன் [4] கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,             ஆலயத்தில் துதிக்க களித்தாயே,             வரும் தவ மதியால் முன் மற [5] மன்னன் தேடிட, உன்             மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே.