28 May 2021

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

                        என்னில் ஒன்றும் இல்லையையா

                        எல்லாம் என் இயேசுவே

 

1.         மேய்ப்பனாய் நான் இருந்தாலோ

            ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே

            புல்லுள்ள இடங்களில் என்னை

            மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு

                        என்னில் ஒன்றும் இல்லையையா

                        எல்லாம் என் இயேசுவே

 

2.         தூதனாய் நான் இருந்தாலோ

            ஒரு எக்காளம் முழக்கிடுவேனே

            வானவர் என் இயேசுவுக்கு

            வாழ்த்து பாடி தருவதற்கு

                        என்னில் ஒன்றும் இல்லையையா

                        எல்லாம் என் இயேசுவே

 

3.         ஞானியாய் நான் இருந்தாலோ

            பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே

            வெள்ளைப்போளம் தூபவர்க்கம்

            அள்ளி அள்ளி தருவதற்கு

                        என்னில் ஒன்றும் இல்லையையா

                        எல்லாம் என் இயேசுவே

 

            என்னைக் கொடுப்பேன்

            என் இயேசுவுக்கு

            ஜீவ பலியாக என்னை

            ஏற்றுக்கொள்ளும் இயேசையரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

27 May 2021

தாயின் கருவில் உன்னை தெரிந்து

தாயின் கருவில் உன்னை தெரிந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    தாயின் கருவில் உன்னை தெரிந்து கொண்டேனே

                        கடைசி வரைக்கும் உன்னை தாங்குவேன்

                        உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன்

                        என்றுமே உன்னை

 

1.         தந்தையும் தாயும் கைவிட்ட போதும்

            உன் கரம் பிடித்து நடத்திடுவேன்

            உன்னை எந்தன் தோல் மேல் சாய்த்து

            ஆற்றி தேற்றிடுவேன்-நான்

            ஆற்றித் தேற்றிடுவேன்

 

2.         முள்முடி சூமந்தேன் உனக்காக நான்

            முற்களினாலே அடிக்கப்பட்டேன்

            என்னை மறந்து தூரம் போனால்

            தேடி வந்திடுவேன்-நான்

            தேடி வந்திடுவேன்

 

3.         மாயையை கண்டு மயங்கிடாதே நீ

            மறுகணம் பாதாளம் சென்றிடுவாய்

            உன்னை மீட்க பாவப்பலியாய்

            சிலுவையில் மரித்தேனே-நான்

            சிலுவையில் மரித்தேனே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...