Posts

Showing posts from November, 2018

வானம் விட்டு பூமி வந்தீர்

இரட்சகர் பிறந்தார் - 6 (2017) வானம் விட்டு பூமி வந்தீர் - உம் காருண்யத்தால் எம்மை மீட்க வந்தீர்  - 2             வார்த்தையால் உம் வல்லமையால் - என்             பாவங்களை இன்று நீக்கப் பிறந்தீர் - 2 நன்றி நன்றி நன்றி சொல்வோம் எல்லா நன்மைகள் தந்தவரை -2       - வானம் 1)         கட்டிலில்லை பஞ்சு மெத்தையில்லை             ஏழையாய் மாட்டிடையில் பிறந்தீரையா - 2                         தாழ்மையின் ரூபமாய் வந்தவரே                         தாரணி களித்திடச் செய்தவரே            - வார்த்தையால் 2)         அன்பாலே என்னை அணைத்தவரே             ஆதியின் பாவத்தைத் தீர்த்தவரே - 2                                                 மரணத்தை வென்று ஜெயித்தவரே                         இம்மானுவேலனாய் வந்தவரே          - வார்த்தையால் -பிரின்சு படைப்பு: Kids Care Mission Prince Productions

கர்த்தருக்குப் பயந்து

128ம் சங்கீதம்           கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் / எவ/னோ, அவன்/             பா/க்கிய /வான்.             உன் கைகளின் பிரயாசத்தை நீ/சாப்பிடு/வாய்; உனக்குப் பாக்கியமும்             நன்மையும் / உண்டா /யிரு /க்கும்.             உன் மனைவி, உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப்             போல் /இரு /ப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும்,             ஒலிவ மரக்கன்றுகளைப் போல் /இரு/ப்பார்/கள்.             இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற /மனு/ஷன்; இவ்விதமாய் ஆசீர்/             வதிக்கப்/படு/வான்.             கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்/வதிப்/பார்; நீ ஜீவனுள்ள             நாளெல்லாம், எருசலேமின் / வாழ்வைக் /காண்/பாய்.             நீ உன் பிள்ளைகளின் பிள்ளை/களை/யும், இஸ்ரவேலுக்கு உண்டாகும்             சமாதானத்/தையும்/காண்/பாய்.             பிதாவுக்கும், குமாரனுக்கும், பரிசுத்த/ஆவி/க்கும்; மகி/மை உண்/டாவ/தாக.             ஆதியிலும், இப்பொழுதும், எப்/பொழுது/மான;சதா காலங்களிலும், மகிமை             உண்டாவ/

செய் என்று சிற்றாறு

434. 1.           செய், என்று சிற்றாறு,             செய், நீ செய், தர்மஞ் செய்;             செய், என்று சிற்றாறு                         இரையும் சத்தம் நீ கேள்;             சிறு ஆறாம் என் செயல் நீ பாரு             செய், நீ செய், தர்மஞ்செய்             சிறு ஆறாம் என் செயல் நீ பாரு             செழிப்பிப்பேன் நாடுகள்.                         பாடிப்பாடி நாளெல்லாம்                         செவ்வையாம்; நீ செவ்வையாம்                         பாடிப்பாடி நாளெல்லாம்                         தர்மஞ் செய்வையாம். 2.          செய், என்று மல்லிகை             செய், நீ செய், தர்மஞ் செய்             செய், என்று மல்லிகை                         வீசும் வாசம் நீ பார்;             விருப்பங்கொள்வார் முகர என்னை             செய், நீ செய், தர்மஞ் செய்             விருப்பங்கொள்வார் முகர என்னை             மணம் என்பாரே மலர். 3.          செய், யேசுவுக்காகச் செய்,             செய், நீ செய், தர்மஞ்செய்,             செய், யேசுவுக்காகச் செய்                        

பால்ய வீரர் வாரும்

433. S.S.706 "Onward Christian soldiers" 1.           பால்ய வீரர், வாரும்                       பாவம் வெறுத்தே,             திட்டி வாசல் சேரும்                         உட்சென்றிடவே;             தட்டுவோருக்கெல்லாம்                         வாசல்திறக்கும்,             யேசு வாழ்த்திச் சேர்ப்பார்                         தேடும் யாரையும்!             பால்ய வீரர், வாரும்                         முன்னே செல்லுவோம்;             விரைந்தோடி வாரும்,                         வெற்றி சிறப்போம். 2.          பால்ய வீரர், வாரும்,                         வெற்றிக் கீதமும்             பாடும் விண்ணோரோடும்                         சேரும் அளவும்;             மோக்ஷ வீட்டில் கூடி                         இன்பத் தொனியாய்,             தூயர், தூயர், தூயர்!                         என்போம் ஏகமாய்.

போற்றிடு ஆன்மமே சிருஷ்டி

432. Lobe den Herren               14, 14, 4, 7, 8. "Praise to the Lord the Almighty" 1.           போற்றிடு ஆன்மமே சிருஷ்டி             கர்த்தாவாம் வல்லோரை             ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு             சுகமானோரை; கூடிடுவோம்             பாடிடுவோம் பரனை             மாண்பாய் சபையாரெல்லோரும். 2.          போற்றிடு யாவையும் ஞானமாய்              ஆளும் பிரானை;             ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை             மறைவில் நம்மை; ஈந்திடுவார்              ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்;             யாவும் அவர் அருள் ஈவாம். 3.          போற்றிடு காத்துனை             ஆசீர்வதிக்கும் பிரானை;             தேற்றியே தயவால் நிரப்புவார் உன்             வாணாளை; பேரன்பராம்             பராபரன் தயவை             சிந்திப்பாய் இப்போதெப் போதும். 4.          போற்றிடு ஆன்மமே, என் முழு             உள்ளமே நீயும்;             ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள்             யாவும் சபையாரே,             சேர்ந்தென்றும் சொல்லுவீரே             வணங்கி மகிழ்

எல்லா நன்மைக்கும் காரணா

431. Easter, Alleluya           L.M. with Alleluyas              எல்லா நன்மைக்கும் காரணா!             எல்லாரும் போற்றும் ஆரணா!                         நல்ல நாதா! வல்ல வேந்தா!             பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா!             பலகோடி நன்றி பூரணா!                         அல்லேலூயா அல்லேலூயா                         அல்லேலூயா அல்லேலூயா                         அல்லேலூயா!

நேர்த்தியான தனைத்தும்

430. Royal Oak              7, 6, 7, 6 with refrain "All things bright and beautiful"              நேர்த்தியான தனைத்தும்             சின்னம் பெரிதெல்லாம்,             ஞானம், விந்தை ஆனதும்             கர்த்தாவின் படைப்பாம். 1.          பற்பல வர்ணத்தோடு                         மலரும் புஷ்பமும்,             இனிமையாகப் பாடி                         பறக்கும் பட்சியும். 2.          வசந்த காலத் தென்றல்,                         பூங்கனித் தோட்டமும்,             காலத்துக்கேற்ற மழை,                         வெய்யோனின் காந்தியும். 3.          ஆம், சர்வவல்ல கர்த்தா                         எல்லாம் நன்றாய்ச் செய்தார்;             இதை நாம் பார்த்துப் போற்ற                         நாவையும் சிஷ்டித்தார்.

பார் முன்னணை ஒன்றில்

429. Cradle Song                                                       11, 11, 11, 11. "Away in a Manger" 1.           பார், முன்னணை ஒன்றில்                     தொட்டில் இன்றியே             பாலனாம் நம்                          இயேசு கிடந்தனரே             வெளியில் புல்மீது                          தூங்கும் பாலன்தாம்             காண மின்னிட்டதே வான் வெள்ளிகள் தாம். 2.          மா, மா, எனும் சத்தம்                          கேட்டு விழிப்பார்,             ஆயின் பாலன் இயேசு                          அழவே மாட்டார்;             நான் நேசிக்கும் நாதா,                         நீர் நோக்கிப் பார்ப்பீர்,             தூக்கத்தில் நீர் தங்கி                         ராவெல்லாம் காப்பீர். 3.          என் நாதா, என்றும்                         நீர் என்னை நேசிப்பீர்,             என்னோடு தரித்தே                         அன்பாய் அணைப்பீர்;             உம் பாலர்தம்மை                          நீர் ஆசீர்வதித்தே             சேர்த்திடும் விண் வீட்டில்

இயேசுவிடம் வா இன்றே

428.              இயேசுவிடம் வா - இன்றே              இரட்சிப்பார் உன்னை, - இன்றே              நம்பி வாறேன் - இன்றே             அல்லேலூயா - ஆமென்.

மெய்யாம் வாசஸ்தலமுண்டே

427. S.S.427 "Oh, think of the home over there" 1.           மெய்யாம் வாசஸ்தலமுண்டே              ஜீவ நதியின் ஓரத்திலாம்;             மோட்ச வாசிகளானவரே             பரிசுத்த சம்பூரணராம்.                         அங்குதான் - அங்குதான்                         மெய்யாம் வாசஸ்தலமுண்டே. 2.          என் பிரிய சிநேகிதரும்             அந்த ஸ்தலத்தில் சென்றிருப்பார்             பரஞ்சோதி சமூகத்திலும்             சுகவாழ்வையும் பெற்றிருப்பார். 3.          என் அருமை ரக்ஷகரும்             பரலோகத்தின் சூரியனாம்,             அந்த வீட்டில் நான் சேர்ந்திடவும்             நீங்கிப்போகும் விசாரமெல்லாம். 4.          சேர்வேன் அதி சீக்கிரமே             மோக்ஷலோகத்தில் ஆனந்திப்பேன்             ஜீவ நதியின் ஓரத்திலே             என் மீட்பரை ஸ்தோத்தரிப்பேன்.

சத்ய வேதமான

426. S.S.757 "Sowing in the morning" 1.           சத்ய வேதமான                    விதை காலை மாலை             விதைப்போம் எப்போதும்                         ஓய்வில்லாமலே,             அறுப்பின் நற்காலம்                         எதிர் நோக்குவோமே,             சேருவோம் எல்லோரும்                         அரிக்கட்டோடே                         அரிக்கட்டோடே                         அரிக்கட்டோடே                         சேருவோம் எல்லோரும்                         அரிக்கட்டோடே. 2.          மழையடித்தாலும்                         வெயிலெரித்தாலும்             குளிர்ச்சியானாலும்                         வேலை செய்வோமே;             நல்ல பலன் காண்போம்,                         துன்பம் மாறிப்போகும்             சேருவோம் எல்லோரும்                         அரிக்கட்டோடே. 3.          கவலை, விசாரம்;                         கஷ்ட நஷ்டத்தோடு             விதைத்தாலும் வேலை                         விடமாட்டோமே             இளைப்பாறக் கர்த்தர்            

வீர தீரமாய் நேரும் சீருமாய்

425. S.S.703 "Sound the battle cry" 1.           வீர தீரமாய் நேரும் சீருமாய்              நின்று ஏகமாய்போர் செய்வோம்;             பயமின்றியும் பின்வாங்காமலும்,             கீதம் பாடியும் முன் செல்லுவோம்.                         சோம்பும் சோர்வும் நீக்கி-வீரராக                         யாரும் வாரும், யுத்தம் பண்ணுவோம்,                         செல்லும் வெல்லும் ஆரவாரமாக                         யேசு நாதர் நம்பிப் போகிறோம் 2.          கொடி ஏற்றுவோம், காளம் ஊதுவோம்;             வாளும் வீசுவோம்; போர்கோலமாய்             கர்த்தர் தாங்குவார்; கூடப்போகிறார்,             வெற்றி சிறப்பார் கெம்பீரமாய். 3.          சேனைக்கர்த்தரே! யேசு நாதரே!             தேவரீரையே துதிப்போம்;             உம்மால் வல்லமை! உம்மால் மகிமை             உம்மால் வெற்றியை கண்டடைவோம்.

முயல்வோம் முயல்வோம்

424. S.S.751 "To the work to the work" 1.           முயல்வோம்! முயல்வோம்!                    தேவ ஊழியரே!             செல்லுவோம் யேசு நாதர்                         நற்பாதையிலே,             மிக்க ஞானத்தினால்                         வழி நடத்துவார்;             வல்ல ஆவியின்                         பெலனை அருளுவார்.                                                 முயல்வோம்-முயல்வோம்                         முயல்வோம்-முயல்வோம்;                         நம்புவோம்-நாடுவோம்,                         நல் மீட்பர் வருமளவும். 2.          முயல்வோம்! முயல்வோம்!                         சுவிசேஷகரே!             காட்டுவோம் தெளிவாய்                         ஜீவ மார்க்கத்தையே;             பாவ நாச விசேஷத்தை                         எடுக்கவும்,             பிராயச்சித்த நற்செய்தி                         விஸ்தரிக்கவும். 3.          முயல்வோம்! முயல்வோம்!                         விசுவாசிகளே!             கூறுவோம் கிறிஸ்துவின்                     

ஆயுததாரி நான்

423. S.S.696 "Only an armour-bearer." 1.           ஆயுததாரி நான்,                    அபாத்திரனே             சேனாபதிக்கோ                         பின் செல்வேனே,             நில், செல் என்றவர்                         சொல்லக் கேட்கவும்,             யேசுவின் நல்வாக்கை                         நம்பி வெல்லவும்.                         பேரொலி கேட்குதே!                                     ஜெயமுண்டாம்!                         போராடுவோம்                                     முனை முகமெல்லாம்.                         சேனாதிபதி என்னை                                     நோக்குவார்;                         ஆயுததாரியையும்                                     நம்புவார். 2.          ஆயுததாரி நான்,                         இந்நேரத்தினில்             சன்னத்தனாகப்                         படை முகத்தில்             போர்க்களத்தில் தாரவாரங்                         கேட்கவே             பயமில்லாமல் யுத்தஞ்                         செய்வேனே. 3.