பாதகன் என் வினைதீர் ஐயா


பாதகன் என் வினைதீர்

154. (82) ஆனந்த பைரவி                                      ஆதி தாளம்

பல்லவி

          பாதகன் என் வினைதீர், ஐயா, கிருபாகரா, நின்
          பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

அனுபல்லவி

                        தீதகற்றவே சிறந்த
                        சேண் உலகினிமை விட்டு,
                        பூதலத் துகந்து வந்த
                        புண்ணியனே, யேசு தேவா. - பாதகன்

சரணங்கள்

1.         வந்துறும் எப்பாவிகளையும்-அங்கீகரிக்கும்
            மாசில்லாத யேசு நாதனே,
            உந்தன் இடம் வந்துளமே உருகி அழுத மாது
            முந்தி மிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? - பாதகன்

2.         சிந்தின உன் உதிரம் அதே-தீயோன் மறத்தைச்
            சின்ன பின்னம் செய்ய வல்லதே;
            பந்தம் உற உன்றன் வலப் பாகமுற்ற கள்வனையே
            விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே - பாதகன்

3.         அற்பவிசுவாசமுளன் ஆம்-அடியேனை இனி
            ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
            தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
            செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. - பாதகன்

- யோ. பால்மர்

Comments

Post a Comment

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே