நல்ல எண்ணமாய் விழித்து
23. Triumph 8,
7, 8, 7, 4, 7
"Werde
munter, main Gemuthe"
1. நல்ல எண்ணமாய்
விழித்து,
தெளிவாகு நெஞ்சமே;
தேவ அன்பையே சிந்தித்து,
ஸ்தோத்திரி, என் உள்ளமே;
இந்த நாளில்
கர்த்தர் உன்னைக் காத்தாரே.
2. ஆ! பிதாவே, மா அன்புள்ள
தேவரீர் என் வேலையை
வாய்க்கப்பண்ணி, துன்பமுள்ள
பாரம் விக்கினங்களை
நீக்கிப்போட்டீர்;
அதற்காக ஸ்தோத்திரம்.
3. அருள்வீசும் ஜோதியான
கர்த்தர் இந்த ராவிலும்
என்னில் தேவரீர் அன்பான
ஜோதியாய் ப்ரகாசியும்;
என்றென்றைக்கும்
என்னைக் கைவிடாதிரும்.
4. எந்தன் ஆவி, தேகம், ஆஸ்தி,
வீட்டார் சுற்றத்தாரையும்,
தேவரீர் அன்பாய்க் காப்பாற்றி,
என் பகைஞர் யாரையும்
கேட்டினின்று
நீக்கி ரட்சித்தருளும்.
Comments
Post a Comment