23 October 2023

வானும் புவியும் வையகமும்

வானும் புவியும் வையகமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

விசுவாச பிரமாணம்

 

            வானும் புவியும் வையகமும்

            வனைந்த வல்ல பரனான

            வானகத் தந்தையே நம்புகிறேன்

 

            அவரொரே திருமகன் கன்னியிடம்

            அனைவரின் நாதர் கிறிஸ்துவாய்

            அவதரித்ததையும் நம்புகிறேன்

 

            பிலாத்துவின் கீழவர் சிலுவையதில்

            பெரும் பாடுகளுடன் இறந்தடங்கி

            பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன்

 

            உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்

            உயிரே எழுந்து பரன்வலமே

            உடனிருப்பதையும் நம்புகிறேன்

 

            உயிருள்ளோரும் இறந்தோரும்

            உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே

            உறுதியாய் வருவார் நம்புகிறேன்

 

            தூய ஆவி தூயோர் சபை உறவு

            பாவமன்னிப்பு உடல் உயிர்ப்பு

            மெய்நிலை வாழ்வையும் நம்புகிறேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...