சேனைகளின் கர்த்தர் தேவன்

சேனைகளின் கர்த்தர் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

R-Disco T-125 Em2/4

 

          சேனைகளின் கர்த்தர் தேவன்

            நம்முடன் இருக்கின்றார்

            சேனைகளின் கர்த்தர் இயேசு

            நம் முன்னே செல்கின்றார்

 

                        சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

                        சேனைகளின் கர்த்தரே வல்ல மீட்பர்

                        சேனைகளின் கர்த்தர் மகாராஜா

                        சேனைகளின் கர்த்தர் நம் தேவன்

 

1.         கோலியாத் பெலிஸ்தியன்

            வாளோடும் ஈட்டியோடும்

            கேடகமும் தரித்தோனாய் வந்தான்

            தாவீதோ கவனையும்

            கற்களையும் கையிலேந்தி

            இஸ்ரவேலின் படைக்காக சென்றான்

 

            இஸ்ரவேலின் தேவனின் படையது

            சேனைகளின் கர்த்தரின் யுத்தமது

            தேவ மக்கள் ஜெயித்தனர்

            எதிரிகள் முறிந்தனர்

 

2.         உலகமும் மாமிசமும் பிசாசும் எதிர்த்து

            வந்தும் வாகை சூடும் வீர சேனாபதி

            வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்

            கொண்ட இயேசுவே எம் அதிபதி

            பாவத்திற்கு எதிர்த்து போராடியே

            சாபத்தீட்டை உதறித் தள்ளுவோமே

            யுத்தம் செய்யப் பழகுவோம்

            இரத்தம் சிந்தப் பயப்படோம்

 

3.         தீங்கு நாளில் அந்தகார

            லோகாதிபதிகளோடும்

            துரைத்தனம் அதிகாரத்தோடும்

            வான லோகப் பொல்லாத

            ஆவிகளின் சேனையோடும்

            பூலோகத்தில் போராட்டங்கள் உண்டே

 

            உலகத்தில் இருக்கும் சாத்தானிலும்

            என்னில் வாழும் தேவன் பெரியவர்

            சாத்தான் எங்கள் காலின் கீழே

            வெற்றிக்கொடி ஏறும் மேலே

 

4.         யுத்தத்திலே வல்லமையும்

            பராக்கிரமும் உள்ள ராஜா

            யார் இந்த மகிமையின் ராஜா

            ரதங்களை சுட்டெரித்து

            ஈட்டிகளையும் முறித்து

            வில்லையும் ஒடித்து ஜெயம் கொண்டார்

 

            இந்த தேவன் உயர்ந்த அடைக்கலம்

            இக்கட்டிலே உன்னத அனுகூலம்

            சேனைகளின் கர்த்தர் அவர்

            ஜெயங்களை தருபவர்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு