சுந்தரப் பராபரனே பரி சுத்தன்

சுந்தரப் பராபரனே பரி சுத்தன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

54. இராகம்: நாட்டை                                       சாப்புதாளம்

 

கண்ணிகள்

 

1.       சுந்தரப் பராபரனே, பரி-சுத்தன் கிறிஸ்தெனும் நித்தியனே,

            மைந்தனாய்ப் பிறந்தீரோ-சுவாமி

            மாங்கிஷத்தில்[1] உருவானீரோ?

 

2.         வான தூதர் போற்றிடவே,-உம்மை-வாழ்த்திப் புகழ்ந்து கொண்டேத்திடவே

            கானத்தொனி ஏற்றிருந்த-சுவாமி

            காட்டு மடத்தில் உதித்ததென்ன?

 

3.         ஆசை மிகும் ஆபிரகாம்-உரு-வாகும் முன் விண்தல

            நேசமுடன் பிள்ளை தந்தும்-அந்த

            நீதிமான் வங்கிஷம்[2] ஆனதென்ன?

 

4.         ராஜன் தவீ தாண்டவனும், அவன்-நண்ணும் பவ தீமையில் மீண்டவனும்

            தாசன் மகன் ஆனதும் ஏன்? சுவாமி

            தாவீதின் சந்ததி மேவின தேன்?

 

5.         பொங்கு பவ நாசனனே, விண்ணோர்-போற்றிப் புகழுஞ் சிம்மாசனனே

            தங்குதற் கிடம் இல்லையோ? சுவாமி

            தபாரிக்க ஒரு ஊர் இல்லையோ?

 

­- ஏ.உவா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] மாமிசம்

[2] வம்சம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு