சுமந்து காக்கும் இயேசுவிடம்

சுமந்து காக்கும் இயேசுவிடம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   சுமந்து காக்கும் இயேசுவிடம்

                        சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

                        அல்லேலுயா அல்லேலுயா - 2

1.         கண்ணின் மணிபோல் காக்கின்றார்

            கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்

            கழுகுபோல் சிறகின் மேல் வைத்து - 2

            காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் - 2

 

2.         ஆயன் ஆட்டை சுமப்பது போல்

            ஆண்டவர் நம்மை சுமக்கின்றார்

            பசும்புல் மேய்ச்சல் நமக்கு உண்டு - 2

            பயப்படாதே சிறுமந்தையே (2)

 

3.         தாயின் வயிற்றில் தாங்கியவர்

            தலைமுறை வரைக்கும் தாங்கிடுவார்

            விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ

            வியாதிகள் தீமைகள் பறந்து விடும் - 2

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு