ஆழமாம் பிரதிஷ்டை செய்துக் கொண்டு

ஆழமாம் பிரதிஷ்டை செய்துக் கொண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஆழமாம் பிரதிஷ்டை செய்துக் கொண்டு

            தோழராம் இயேசுவில் சார்ந்துக் கொண்டு

            பாழான லோகத்தை தள்ளிவிட்டு

            வாழவே செல்கின்றேன் மோட்ச வீட்டில்

 

                        பிரதிஷ்டையை யான் புதுப்பிக்கிறேன்

                        கிறிஸ்தேசுவில் தினம் ஜீவிக்கவே

                        பிரதிஷ்டையின் ஆழம் சிலுவைதானே

                        இயேசுவைப் பின் செல்லுவேன்

 

1.         ஈலோக இன்பங்கள் ஒன்றும் வேண்டாம்

            மேலோக இன்பமே என் வாஞ்சையாம்

            ஈலோகத்தில் என் காலம் பறந்திடுமே

            மேலோகின் பொற்காலம் வாழ்ந்திடவே

 

2.         பாவங்கள் யாதொன்றும் செய்யாமலே

            பரிசுத்தமாய் எந்தன் பாதை செல்வேன்

            கறைகள் என் ஆத்மாவில் ஒட்டவிடேன்

            குறைகளை ஒழித்தேகி முன்னால் செல்வேன்

 

3.         மூடரின் நெஞ்சில் எழும்பும் கோபம்

            ஏழை என் நெஞ்சில் எழும்பாமலே

            மூடனைப் போலவே கோபம் கொள்ளேன்

            நாடுவேன் இயேசுவின் சாந்தமதை

 

4.         கொள்ளேனே பொறாமை யான் ஒருவர் மேலும்

            நிறைப்பேன் என் உள்ளத்தை அன்பினாலே

            விரும்புவேன் பிறர் வாழ்வைச் சந்தோஷமாய்

            இயேசு என் நேசரின் மகிமைக்காக

 

5.         ஒருபோதும் முறையிடேன் ஒன்றைக் கொண்டும்

            இருப்பேன் என் வாயைத்தான் மூடிக்கொண்டு

            ஜீவிப்பேன் எப்போதும் யோக்கியனாக

            ஆவியில் கபடங்கள் சற்றும் இன்றி

 

6.         பொல்லாத அவயவம் நாவைக்கட்டி

            யாரையும் குறைவாகப் பேசாமலே

            எவ்விதப் பொய்யையும் பேசாமலே

            மனதார உண்மையைப் பேசிடவே

 

7.         விரோதங்கள் மனதிலும் கொள்ளாமலே

            தீமையைப் சகிப்பேனே திருவருளால்

            சகோதரர் என்னதான் செய்திட்டாலும்

            உள்ளத்தில் அவர்களை நேசிக்கவே

 

8.         உத்தமர் என் இயேசு ஜீவித்தாற்போல்

            அத்தனே ஜீவிக்க வாஞ்சிக்கிறேன்

            கர்த்தனே கருணை செய் கிருபை கூர்ந்து

            ஸ்தோத்திரம் பாடுவேன் இன்றும் என்றும்


            Aazhamaam pirathishdai seithuk kondu

            Thoazharaam Yesuvil saarnthu kondu

            Paazhaana loakaththai thallivitdu

            Vaazhavae selkintraen moatsa veettil

 

                        Pirathishdaiyai yaan puthuppikkitraen

                        Chrithaesuvil thinam jeevikkavae

                        Pirathishdaiyin aazham siluvaithanae

                        Yesuvaip pin selluvaen

 

1.         iiloaka inpangkal onrum vaendaam

            Maeloaka inpamae en vaagnsaiyaam

            iiloakaththil en kaalam paranhthidumae

            Maeloakin potkaalam vaazhnhthidavae

 

2.         Paavangkal yaathonrum seiyaamalae

            Parisuththamaai enhthan paathai selvaen

            Karaikal en aathmaavil otdavidaen

            Kuraikalai ozhiththaeki munnaal selvaen

 

3.         Moodarin nhegnsil ezhumpum koapam

            Aezhai en nhegnsil ezhumpaamalae

            Moodanaip poalavae koapam kollaen

            Naaduvaen iyaesuvin saanhthamathai

 

4.         Kollaenae potramai yaan oruvar maelum

            Neraippaen en ullaththai anpinaalae

            Virumpuvaen pirar vaazhvaich sanhthoashamaai

            Yesu en naesarin makimaikkaaka

 

5.         Orupoathum muraiyidaen onraik kondum

            iruppaen en vaayaiththan mootikkondu

            jeevippaen eppoathum yoakkiyanaaka

            Aaviyil kapadangkal satrum inri

 

6.         Pollaatha avayavam naavaikkatti

            Yaaraiyum kuraivaakap paesaamalae

            Evvitha poiyaiyum paesaamalae

            Manathara unmaiyaip paesidavae

 

7.         Viroathangkal manathilum kollaamalae

            Theemaiyai sakippaenae thiruvarulaal

            Sakoatharar ennathan seithitdaalum

            Ullaththil avarkalai naesikkavae

 

8.         Uththamar en iyaesu jiiviththatpoal

            Aththanae jeevikka vaagnsikkitraen

            Karththanae karunai sei kirupai koornthu

            Sthoaththiram paaduvaen indrum endrum

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு