05 October 2023

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே

பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே

            மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார்

            விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம்

                                    மனுஷர்மேல் பிரியமே

 

1.         வானிலே தூதர் சேனை பாடினாரே வாழ்த்தினாரே

            வான வேந்தன் பாலகனாய் தாவீதூரில் பிறந்தாரே

            அந்த விந்தைசெய்தி கேட்டமந்தை ஆயர்ஒன்று கூடி

            வியந்தார் விரைந்தார் பாலனைப் பணிந்திடவே

 

2.         வானிலே புது வெள்ளி வழிகாட்டி சென்றிடவே

            வானசாஸ்திரிகள் மகிழ்ந்தனரே தாரகையை  தொடர்ந்தனரே

                        விந்தை பாலன் பாதம் பணிந்தார்

                        பொன்போளம் தூபம் படைத்தார்

                        மகிமை மகிமை ராயர் பணிந்ததினால்

 

3.         மின்னிடும் தாரகை போல் வழிகாட்டி சென்றிடுவேன்

            பாதை மாறி செல்வோரை பாதை காட்டி நடத்திடுவேன்

                        வழி சத்தியம் ஜீவன் இவரே

                        இரட்சிப்பின் தேவன் இவரே

                        இவரே இவரே வாழ்வு தருபவரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...