23 October 2023

அன்பின் தேவ நற்கருணையிலே

கீ.கை:213

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

213.

 

                   அன்பின் தேவ நற்கருணையிலே

                        அழியாப் புகழோடு வாழ்பவரே

                        அன்புப் பாதையின் வழி நடந்தே

                        அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

 

1.         அற்புதமாக எமைப் படைத்தீர்

            தற்பரன் நீரே எமை மீட்டீர்

            பொற்புடன் அப்ப குண ரசத்தில்

            எப்பொழுதும் வாழ் இறைவனானீர்

            எத்தனை வழிகளில் உமதன்பை

            எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

 

2.         கல்வாரி மலையின் சிகரமதில்

            கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்

            நற் கருணை விசுவாசமதில்

            நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்

            இளமையின் பொலிவால் திருச்சபையும்

            யாவரும் வாழ தயை புரிவீர்

 

3.         ஞானம் மிகுந்த எம் பாத்திரத்தில்

            நல்லொளி பாய்ச்சும் இறைவனே நீர்

            ஞாலமெல்லாம் இருள் நீங்கிடவே

            நாடுகள் வீடுகள் எங்கணுமே

            நலம் பல பொழிவீர் நல் தேவா

            நற்கருணை வாழ் நாயகனே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...