பெரிய காரியம் செய்யும் தேவனே

பெரிய காரியம் செய்யும் தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

            பெரிய காரியம்‌ செய்யும்‌ தேவனே!

            மண்ணாம்எனையும்‌ நீர்‌ நேசித்ததேனையா? - 2

            ஜெயத்தின்‌ மேல்‌ ஜெயமே எப்போதும்‌ எனக்கு - (2)

            ஜெயித்த இயேசு என்னோடிருப்பதினாலே - (2)

 

                             சரணங்கள்‌

 

1.         யாவையும்‌ எனக்காய்‌ செய்து முடித்தீர்‌

            யாருண்டு உம்மையல்லால்‌ இயேசு நாயகா! - 2

            தாழ்வதில்‌ ஏழை எனையும்நினைந்து

            தள்ளிடாது சேர்த்ததுந்தன்‌ கிருபையே! - 2 - பெரிய

 

2.         என்னை இழுத்துக்கொள்ளும்‌ ஓடி வருவேன்‌ நான்‌

            திராட்சரசத்திலும்‌ உம்‌ அன்பு இனியது - 2

            உந்தனின்‌ நாமம்‌ ஊற்றுண்ட தைலம்‌

            உத்தமரே உம்மை நேசித்திடுவேன் - 2 - பெரிய

 

3.         அக்கினியில்‌ மலர்ந்த மலர்‌ நானையா!

            வெயிலாம்‌ சோதனையில்‌ வாடிடுவேனோ? - 2

            பாதாளம்‌ போன்ற கொடிய அன்பினால்‌

            பாதாளத்தின்‌ வல்லமையை ஜெயிப்பேன் - 2 - பெரிய

 

4.         என்னைப்‌ பெலப்படுத்தும்‌ கிறிஸ்துவினாலே

            எல்லாம்‌ செய்திட பெலன்‌ உண்டு எனக்கு - 2

            சத்துரு சீறி வெள்ளம்‌ போல்‌ வந்தாலும்‌

            சத்தியரே ஜெயக்கொடி ஏற்றுவீர் - 2 - பெரிய

 

5.         தேவரீர்‌ சகலமும்‌ செய்ய வல்லவர்‌

            செய்ய நீர்‌ நினைத்தது தடைபடாது - 2

            வழுவாதெந்தனைக்‌ காத்திடும்‌ தயவால்‌

            பழுதில்லாதுந்தன்‌ முன்‌ நிறுத்திடும் - 2 - பெரிய

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே