31 October 2023

ஆகாதவனின் சாவை நாம் விரும்போம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       ஆகாதவனின் சாவை நாம்

            விரும்போம் அவன் பாவமாம்

            வழியை விட்டு நம்மண்டை

            மனந்திரும்பி வாழ்வதை

            விரும்புவோம் என்றாண்டவர்

            மாஆணையோடே சொன்னவர்.

 

2.         மனிதனே இவ்வார்த்தையை

            உன் மனத்தாபத்தில் நினை;

            அமிழாதே இங்குனக்கே

            நல்லாறுதல் கிடைக்குமே;

            நொறுங்குண்டோரைஸ்வாமி யார்

            அன்பாகப் பார்ப்போம் என்கிறார்.

 

3.         ஆனாலும் உன் நினைவிலே

            நீர் நிர்விசாரனாகாதே;

            நெடுநாள் இருக்கின்றது

            நான் இங்கே நன்றாய்ப் பூரித்து

            இருந்தும் கடைசியிலே

            மன்னிப்படைவேன் என்காதே.

 

4.         மெய்தான் கர்த்தாவின் தயவு

            பெரியதாக உள்ளது;

            இதோ விசாரமின்றியே

            அந்த நினைவின்பேரிலே

            பொல்லாப்புச் செய்யும் மனிதன்

            கோபாக்கினைக் குள்ளானவன்.

 

5.         சுதனுக்காகத் தயவு

            நாம் செய்வோம் என்றோர் உனக்கு;

            நீ நாளை உயிருடனே

            இருப்பாய் என்றதில்லையே;

            நீ சாவாய் என்றறிகிறாய்

            எப்போதோ என்றநிந்திராய்.

 

6.         இப்போ குணப்படு; இப்போ

            ஆங்காலம்; நாளை என்னவோ;

            இப்போ சுகித்தோரில் சிலர்

            ஓர் வாரம் போனால் போனவர்;

            ஐயோ குணப்படாதோனாய்

            நீ செத்தால் வாதைக்குள்ளாவாய்.

 

7.         ஆ இயேசுஸ்வாமி மரணம்

            அணுகுமுன்னே சீக்கிரம்

            நான் உம்மண்டைக்குச்சேர நீர்

            சகாயம் பண்ணக்கடவீர்.

            நான் சாவுக்கின்றும் என்றைக்கும்

            ஆயத்தமாயிருக்கவும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...