24 October 2023

சின்னஞ்சிறு பாலகனே தாவீதின் குமாரனே

சின்னஞ்சிறு பாலகனே தாவீதின்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   சின்னஞ்சிறு பாலகனே

                        தாவீதின் குமாரனே

                        பெத்தலையில் பிறந்தவரே

                        இயேசு ராஜா

            தாழ்மையான கோலத்திலே

            ஏழ்மையான எங்களையும்

            மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா

 

                        அதிசயமானவரும்

                        ஆலோசனை கர்த்தரும்

                        வல்லமையுள்ளவரும்

                        நீரே நீரே

                        எனைத் தேடி வந்தவரும்

                        என்னோடு இருப்பவரும்

                        புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே

 

1.         மார்கழி மாதத்திலே

            பனி பொழியும் நேரத்திலே

            மாசற்ற ஜோதியாய்

            மண் மீது அவதரித்தார்

            நட்சத்திரம் வழிகாட்ட

            ஞானிகளும் பின்தொடர

            பெத்தலையில் இயேசுவை

            தொழுது கொண்டனரே             - சின்னஞ்சிறு

 

2.         அன்னைமரி பாலகனாய்

            யோசேப்பின் குமாரனாய்

            தேவனின் மைந்தனாய்

            மண்மீது உருவெடுத்தார்

            தூதர்கள் தோன்றிட

            மேய்ப்பர்கள் நடுங்கிட

            மன்னவர் இயேசுவை

            தொழுவத்தில் கண்டனரே        - சின்னஞ்சிறு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...