எனக்கொரு ஆசையுண்டு என்

எனக்கொரு ஆசையுண்டு என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          எனக்கொரு ஆசையுண்டு

            என் இயேசுவை காண வேண்டும்

            எனக்கொரு ஆவல் உண்டு

            நான் அவரோடு பேச வேண்டும்

 

                        வையகமே வானகமே

                        எனது ஆசை நிறைவேறுமா

 

1.         மலையும் காடும் சோலையும்

            அலைந்தோடும் கடலும் தேடினேன்

            காணேன் அவரை கதறி அழுதேன்

            கர்த்தரே வாரும் வாரும் என்றேன்

 

2.         கரம் ஒன்று என்னைத் தொட்டது

            என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது

            வேதம் தந்தேன் தினமும்

            அதிலே என்னை பார் என மொழிந்தது

 

3.         தினமும் வேதத்தில் காண்கிறேன்

            தேவாதி தேவனை துதிக்கின்றேன்

            ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்

            ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே