அன்புள்ளங்கள்
இங்கே கூடுது - அந்தக்
கன்மலையைத் தான் தேடுது - 2
ஆண்டவர் நாமத்தைப் பாடுது
- அவர்
அண்டையிலே வந்து சேருது -
2
1. வேதத்திலே மனம் சேருது - வேத
நாயகனைத்தான் தேடுது - 2
பேரின்பப் போதனை தந்தவரை - தினம்
நன்றியினால் துதி பாடுது - 2 - அன்புள்ளங்கள்
2. தேவனின் பிள்ளைகள் ஆகிட - இவர்
நெஞ்சங்கள் இங்கே ஏங்குது - 2
வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம
சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் - 2 -
அன்புள்ளங்கள்
3. பாவங்கள் போக்கிடும் தேவனை - இங்கு
பார்த்திடக் கண்கள் ஏங்குது - 2
வாருங்கள் இயேசுவின் பாதத்தில் - ஜென்ம
சாபங்கள் தீர்ந்திடும் வேதத்தில் - 2 -
அன்புள்ளங்கள்
4. நித்திய ஜீவனை நாமடைய - அந்தச்
சத்திய நாதனை நாடுவோம் - 2
கேட்பதைத் தந்திடும் தேவனிடம் - எங்கள்
கேட்டினை இரட்சிக்கப் பாடுவோம் - 2 - அன்புள்ளங்கள்
No comments:
Post a Comment