அன்பே
கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்-எங்கள்
பரிகார பலியானீர் - அன்பே
2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே - அன்பே
3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா - அன்பே
4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே - அன்பே
No comments:
Post a Comment