27 February 2026

அன்புடன் எங்களை ஆண்டருளும் தேவா

ஞா.கீ:402

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

402. இராகம்: நாட்டை                                   ஆதி தாளம்

 

கண்ணிகள்

 

1.       அன்புடன் எங்களை ஆண்டருளும் தேவா

          அனைவரும் உம்பாதம் போற்றுகின்றோம்;

            இன்பமுக வொளி எங்கள் அகம் வீச

            எழுந்தருள்வாய் யேசு பெருமானே.

 

2.         வேரினில் ஊன்றியே விளங்கவுன் சாரத்தை

            விரைவுடன் வேதனே[1] கனிந்திடுவாய்;

            தாரணியில் வீழா தங்கும் ஜீவதருவாய்

            தழைத்திடவே செய்வாய் தயாபரனே!

 

3.         மலர்ந்த நல்லுள்ளமும் மணங்கமழ் வாழ்க்கையும்

            மறையவனே தந்து வசித்திடுவாய்;

            அலைந்தவர்கள் வந்து அதிசயத் தேனுண்டு

            அகமகிழ நாளும் அலங்கரிப்பாய்.      

 

- ஒய். ஆமோஸ்



[1] இறைவன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...