அன்பின்
நாதா எனக்கென்று
ஒன்றையும்
நான் விரும்பவில்லை - 2
தமக்கென்று ஒன்றுமின்றி
தந்தீரே நீர் எனக்காக
1. நன்மை ஒன்றும் என்னில் இல்லை
நாடி வந்தீர்
ஏனோ என்னை - 2
அன்பே
ஏனோ நேசம் கொண்டீர்
அன்பே
இல்லா எந்தனின் மேல் - 2
2. உம் இதய
பாரம் தாரும்
உம்மைப்
போல என்னை மாற்றும் - 2
எந்தன்
வாழ்வை எண்ணி உந்தன்
உள்ளம்
என்றும் மகிழ வேண்டும் - 2
3. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் - 2
எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
உந்தன் பணி சேவைக்கல்லோ - 2
4. பாரில் வாழ்ந்தேன் எனக்கென்றே
பாதி வாழ்க்கை கடந்ததய்யோ - 2
மீதி வாழ்க்கை யாருக்காக
நீதி தேவா நின் மகிமைக்கல்லோ - 2
5. நன்றி கெட்ட நீசன் என்னை
நம்பி தந்தீர் உந்தன் பணி - 2
நாதா இனி எனக்கல்ல
உந்தனுக்கே பிழைத்திருப்பேன் - 2
No comments:
Post a Comment