13 February 2026

அன்பர் இயேசு நாமமே

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அன்பர் இயேசு நாமமே

                        சொன்னால் இன்பம் பெருகுதே

                        என்மேல் கொண்ட அன்பையே

                        எண்ணி அகமகிழ்ந்தேன்

 

1.         விண்ணை விட்டிறங்கினார் ஏழைக் கோலமெடுத்தார்

            என்னை மீட்டுக் கொள்ளவே தம்மை தியாகம் செய்தாரே

            இன்ப இயேசுவை அண்டிக்

            கொண்டால் எல்லா குறைகளும் தீர்த்திடுவார்

            துன்பம் துயர் யாவும் துடைத்திடுவார்

            ஜீவ ஒளி நம்மில் ஈந்திடுவார்

            அந்த ஜீவநதி ஓரமாய் நாம்

            யாவரும் சேர்ந்திடுவோம்

            நீயும் அங்குவர ஆசித்தால் வேகம்

            இயேசுவண்டை வாராயோ

 

2.         மாந்தர் பாவம் மன்னிக்க இயேசு பாவமானாரே

            சாமம் யாவும் தீர்க்கவே அவர் சாபமானாரே

            மாளா துயர் போக்கிட

            மோட்சலோகம் சேர்த்திட

            மன்னன் இயேசு நமக்காய் சொந்த

            ஜீவன் தந்தாரே

 

 

3.         சத்திய தேவ வசனம் நித்திய ஜீவன் அருளும்

            சமாதானம் பெருக நிதம் வழி நடத்தும்

            தம்மை நம்பும் யாவர்க்கும் அரண் அடைக்கலமும்

            தயை காட்டி நடத்தும் தேவ

            கன்மலை அவர்

 

4.         சிறுமை பட்டவனே வாழ்வில் நொறுங்குண்டோனே

            உன்னை தேற்ற வந்தவர் அன்பாய் தேடி நிற்கிறார்

            உன்னை பிரகாசிப்பிப்பார்

            கொடுமையை நீக்குவார்

            கண்ணீர் யாவும் துடைப்பார் அவர்

            பாதம் அண்டிக் கொள்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...