28 February 2026

அன்பே என் ஆருயிரே என் கல்வாரி நாயகரே

நிஜீ.கீதங்கள்:2364

To Download Txt Lyrics file

 

1.       அன்பே என் ஆருயிரே என் கல்வாரி நாயகரே

            ஆசாரியனாய் நான் வந்தேனையா

            பலி செலுத்த வந்தேனையா

            சரணம் சரணம் ஐயா 3 - உம் பாதம் சரணம் ஐயா

 

2.         கல்வாரி சிலுவையாமே

            வெண்கல பலிபீடமே

            நேசரே ஆட்டுக்குட்டி அவர்

            இரத்தத்தை தொழுதிடுவோம் - சரணம்

 

3.         ஜீவ ஆவியானவரே

            என்னைக் கழுவும் தண்ணீர் தொட்டி

            என்னை ஆவியில் சுத்தமாக்கி

            பரிசுத்த ஸ்தலத்தில் புகுவேன் - சரணம்

 

4.         பரிசுத்த ஆவியானவர்

            நீரே எரியும் குத்து விளக்கே

            உம்மை வாழ்த்தி வரவேற்கிறேன்

            என் இதய ஆசனத்தில் - சரணம்

 

5.         உம் தேவ சமூகத்திலே

            சூடான அப்பங்கள் உண்டே

            உந்தன் அப்பமாம் வசனத்தாலே

            என்னை திருப்தியாக்குமையா - சரணம்

 

6.         தூப பலிபீடத்தின் முன்

            நான் ஆவியில் தொழுதிடுவேன்

            புதுப் பாடல்கள் பாடிடுவேன்

            நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் - சரணம்

 

7.         திரையும் விலகியதே

            கிருபாசனத்தின் முன் நிற்கிறேன்

            சாட்சி பெட்டியாம் கிறிஸ்து மூலம்

            விண்ணப்பங்களை ஏறெடுப்பேன் - சரணம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...