13 February 2026

அன்பர் இயேசுவின் நாமத்திலே

நிஜீ.கீதங்கள்:2338

To Download Txt Lyrics file

 

                   அன்பர் இயேசுவின் நாமத்திலே

                        இன்று இன்பமாய் நாம் மகிழ்வோம்

                        பாவியை மீட்டார் பரம சுதன்

                        ஆவியை ஈந்தார் அருள் குமாரன்

                        காசினி மீதினில் கருணை பெற்றோமே

                        ஆவியில் மகிழ்ந்து நாம் அகமகிழ்வோம்

 

1.         மாமிச சிந்தை மகா மரணம் - தூய

            ஆவியின் சிந்தை ஜீவன் சமாதானம்

            அச்சாரமாம் ஆவி அருளினாரே

            உச்சித வரங்களும் உவந்தனரே

            எச்சரித்துணர்ந்த சத்திய ஆவியை

            இச்சணம் ஏற்றி நாம் ஆர்ப்பரிப்போம்

 

2.         நம் பட்சத்தில் தேவன் இருந்தால்

            நம்மை விரோதிப்பவன் யாரோ

            சொந்த மைந்தனை அன்பாய் ஈந்த பரன்

            எந்த நன்மை அன்பாய் ஈந்திடாரோ

            துன்பம் பசி மோசம் பட்டயம் மரணம்

            அன்பரை விட்டெம்மை பிரித்திடுமோ

 

3.         மேகம் போல் சாட்சி சூழ்ந்து நிற்க

            கெட்ட பாவப் பாரம் நெருங்குமோ

            வேகமாய் இயேசுவண்டை ஓடிடுவோம்

            தாகமாய் ஈசன் அன்பை நாடிடுவோம்

            ஜெகமதில் மாந்தர் ஜெயம் பலம் பெற்றோம்

            அகமகிழ்ந்தார்ப் பரிசுத்தானந்திப்போம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...