26 February 2026

அன்பின் முரசு அகிலத்தில் கேட்கிற

ஆ.கீ:002

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                                    பல்லவி

 

                        அன்பின் முரசு அகிலத்தில் கேட்கிற முழக்கம்

                                ஆண்டவர் சிலுவை நேசரால் - 2

 

1.             மாண்ட இருதயங்களுக்குள் ஜீவனை வைத்தார் - (2)

                மாந்தரின் நம்பிக்கையை மகிழச் செய்தார் - (2)

                அற்புதத்தை அகிலத்தில் அறிவித்தார்

                அறையுண்ட சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்

 

2.             சிலுவையில் சீரேசு ஜீவனை விட்டார் - (2)

                சஞ்சலங்களினின்றும் விடுதலை ஈந்தார் - (2)

                அன்பின் பாத்திரத்தை யேசு அளித்தார்

                அறையுண்ட சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்

 

3.             கபோதி கட்குக் கண்களைக் கொடுத்தார் - (2)

                கால் இல்லாத ஊனர்க்குக் காலை ஈந்தார் - (2)

                காட்சியைக் கர்த்தர் யேசு காட்டினார்

                கடாவப்பட்ட சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்

 

4.             தூக்க மயக்கங் கொண்ட சுத்த சோம்பேறியை - (2)

                சும்மா ஜீவியத்தைப் போக்கும் சுகஜீவியை - (2)

                சுத்தர் இயேசு கர்த்தர் முற்றும் கலைத்தார்

                சுதன் சுவிசேஷ சிலுவை நேசர் தாமே - 2 - அன்பின்

 

5.             அன்பாகவே அழைக்கிறார் அனைவரையும் - (2)

                அலையும் அசடர்கட்கு வழியையும் - (2)

                காசினியோர் கண்டு வாசிக்கவும்

                கடாட்சித்தார் சிலுவை நேசர்தாமே - 2 - அன்பின்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...