28 February 2026

அன்பெனும் அருட்பெரும் செல்வம்

ஆ.கீ:13

To Download Txt Lyrics file

 

          பல்லவி

 

                    அன்பெனும் அருட்பெரும் செல்வம் - அது

                        என்னகந்தனிலே இல்லையெனில்

                        என்னுடைய வாழ்வில் பயன் என்ன

                        என்னுடைய வாழ்வில் பயன் என்ன

 

சரணங்கள்

 

1.         மண்ணோர் மொழிகளை அறிந்திடினும்

            விண்ணோர் மொழிகளை உரைத்திடினும் - 2

            என்பால் நிலவும் பண்புகளில்

            அன்போர் அணுவும் இல்லையெனில்

            வெண்கல ஒலியும் தாளமிடும் - (2)

            கிண்கிணி நாதமும் ஆனவனே - அன்பெனும்

 

2.         என்னுடல் எரிதழல் கொண்டாலும்

            என் பொருள் முழுவதும் இழந்தாலும் - 2

            என் பலம் விந்தைகள் செய்தாலும்

            எண்ணரும் புகழ் எனையடைந்தாலும்

            அன்பெனும் இறையருள் இல்லையெனில் - (2)

            என்னிடம் உள்ளது எதுவுமில்லை - அன்பெனும்

 

3.         மலைதனைப் பெயர்க்கும் பலமிருந்தும்

            அலை கடல் தூர்க்கும் திறம் இருந்தும் - 2

            கலைகளை அறியும் அறிவிருந்தும்

            உலகியல் தெளியும் உளமிருந்தும்

            நலம் பல நல்கும் அன்பில்லையேல் - (2)

            பலன் தரா வாழ்வென் வாழ்வாமே - அன்பெனும்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...