அன்பு நேசரே
உம்திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன் - அன்பு நேசரே
ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே
1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் (2)
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் (2) - ஆராதனை
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும்
(2)
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும் (2) - ஆராதனை
3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் (2)
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும் (2) - ஆராதனை
4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் (2)
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும் (2) - ஆராதனை
No comments:
Post a Comment