அன்பினில்
பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
- 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் -
2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்
- அன்பினில்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும்
- 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்
- அன்பினில்
3. மலர்ந்திடும்போது மணம் தரும் பூப்போல்
புலர்ந்திடும் வாழ்வு பணிவிடை செய்தால்
நலம் பெறக் காக்கும் கடவுளைப் போற்றி - 2
நிலந்தனில் இணைந்த குடும்பமாய் வாழ்வோம் - அன்பினில்
No comments:
Post a Comment