27 February 2026

அன்புத் தந்தையே என் இறைவா

நிஜீ.கீதங்கள்:1007

To Download Txt Lyrics file

 

                   அன்புத் தந்தையே என் இறைவா

                        அனுதினம் போற்றுகிறேன்

                        நீரல்லால் எனக்கு வாழ்வு இல்லை

                        நீரல்லால் வேறு வழியுமில்லை

 

1.         அநாதி சிநேகத்தால் அன்பு கூர்ந்தீர்

            காருண்யத்தால் என்னை இழுத்துக் கொண்டீர்

            முடிவு வரையும் அன்பு கூர்ந்ததால்

            சிலுவையில் எனக்காக பலியானீரே

 

2.         எனது பெலவீனம் ஏற்றுக் கொண்டு

            பெலவானாய் என்னை மாற்றினீரே

            உம்மாலே சேனைக்குள் பாய்ந்து சென்றிட

            உன்னத ஆவியை கொடுத்தீரய்யா

 

3.         உமது காயத்தால் என் நோய்களை

            சுகமாக்கி என்னை மீட்டுக் கொண்டீர்

            உலகின் ஒளியே உத்தமர் துணையே

            உம்மையே துதித்து தினம் பாடுவேன்

 

4.         மெய்யாகவே என் பாடுகள் ஏற்றுக் கொண்டு

            துக்கங்களை நீரே சுமந்தீரைய்யா

            எனக்காக காயப்பட்டு நொறுக்கப்பட்டீரே

            இயேசுவே உமதன்பு என்றும் போதுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...