அன்பரே
உம் பாதத்தில்
எப்போதும்
காத்திருப்பேன்
உம் சமூகத்தில் நான் மகிழ்ந்திருப்பேன்
உம் பாதத்தில் இளைப்பாறுதல்
1. யாக்கோபைப் போல் நான் பற்றிக் கொள்வேன்
என் முழு பெலத்தோடு போராடுவேன் - 2
நீர் ஆசீர்வதிக்காவிடில் விடமாட்டேன்
உம் பாதத்தை பற்றிக் கொண்டு விடமாட்டேன்
- அன்பரே
2. எலிசா எலியாவைப் பற்றிக் கொள்வேன்
இரட்டிப்பான அபிஷேகம் பெற்றுக் கொண்டார்
உம் பாதத்தை நானும் பற்றிக் கொள்வேன்
இரட்டிப்பான அபிஷேகம் பெற்றுக் கொள்வேன்
- அன்பரே
3. மரியாளை போல் நான் அமர்ந்திருப்பேன்
என் நல்ல பங்கை தெரிந்து கொள்வேன்
என் நல்ல பங்கு நீர்தானையா - உம்
பாதம் எனக்கு போதுமையா (2) - அன்பரே
No comments:
Post a Comment