26 February 2026

அன்பு நிறைந்த பொன் இயேசுவே

நிஜீ.கீதங்கள்:360

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பு நிறைந்த பொன் இயேசுவே

                        நின் பாத சேவை என் ஆசையே

 

1.         உன்னதத்தை விட்டிறங்கி

            பாரினில் வந்த என் இயேசுவே

            உம் அடிமை உம் மகிமை ஒன்றையே

            வாஞ்சித்து நாடுகிறேன்

 

2.         ஜீவனற்ற பாவி என்னில்

            ஜீவன் பகர்ந்த இயேசுவே

            உம்மையல்லால் பாரில் வேறே

            சிநிகிப்பதில்லை நான் யாரையும்

 

3.         குற்றுயிராய்க் கிடந்த என்னை

            மீட்டுக் கொண்டீர் உம் அன்பினால்

            என்னிலுள்ள நன்றியுள்ளம்

            தாங்குவதெவ்விதம் நாயகா

 

4.         இன்று பாரில் கண்ணீரில் உம்

            வசனம் விதைப்பேன் நான்

            அன்று நேரில் உம் அருகில் வந்து

            கதிருகள் காண்பேன் நான்

 

5.         என் மனதில் வந்து வாழும்

            மகிமையின் நம்பிக்கையே

            நீர் பெருக நான் சிறுக

            உம்மில் மறைந்து நான் மாயட்டும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...