26 February 2026

அன்பின் தேவன் ஆண்டவர்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        அன்பின் தேவன் ஆண்டவர்

                        அடைக்கலம் எனதாண்டவர்

                        கண்மணி போல நம்மை நடத்தி

                        கடைசி வரையில் காப்பவர்

1.         துன்பங்கள் சூழும் வேளையில்

            துணையாய் நின்று காத்திடுவார் - 2

            துயரம் யாவும் போக்கி நம்மை - (2)

            தூய வழியில் நடத்துவார் - (2) - அன்பின்

2.         கவலை கஷ்டங்கள் வந்தாலும்

            இனி நாம் கலங்க தேவையில்லை - 2

            கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் - (2)

            யாவையும் நன்மையாய் மாற்றிடுவார் - (2) - அன்பின்

3.         தீராத வியாதிகள் வந்தாலும்

            தீங்கென்னை தொடரா காத்திடுவார் - 2

            குறைகளை எல்லாம் நீக்கி நம்மை - (2)

            குணமாக்கி என்றுமே அரவணைப்பார் - (2) - அன்பின்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...