28 February 2026

அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்-1

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்

                        அருளைத் தந்த இயேசுவைப் பாடுவேன்

 

1.         அறிவைத் தந்த இயேசுவைப் பாடுவேன்

            அறியாமை அகற்றிய நேசரைப் பாடுவேன்

 

2.         ஆவியால் நிறைக்கும் இயேசுவைப் பாடுவேன்

            ஆற்றல் தந்த ஆவியரைப் பாடுவேன்

 

3.         இனிமையான இயேசுவைப் பாடுவேன்

            இரக்கம் உள்ள அன்பரைப் பாடுவேன்

 

4.         ஈடுபாடு ஊட்டும் இயேசுவைப் பாடுவேன்

            ஈர்க்கும் கருணை வள்ளலைப் பாடுவேன்

 

5.         உயிர்க்கு ஜீவனாம் இயேசுவைப் பாடுவேன்

            உண்மை வழி நடத்துபவரைப் பாடுவேன்

 

6.         ஊக்கமளித்த இயேசுவைப் பாடுவேன்

            ஊழியம் தந்த மீட்பரைப் பாடுவேன்

 

7.         எளிமை கற்றுத் தந்த இயேசுவைப் பாடுவேன்

            எல்லோரையும் இரட்சிப்பவரைப் பாடுவேன்

 

8.         ஏற்ற தாழ்வு இல்லா இயேசுவைப் பாடுவேன்

            ஏற்றம் தந்த மகிமையானவரைப் பாடுவேன்

 

9.         ஐயமெல்லாம் நீக்கும் இயேசுவைப் பாடுவேன்

            ஐக்கியம் கற்றுத் தந்தவரைப் பாடுவேன்

 

10.       ஒளி விளக்காய் வந்த இயேசுவைப் பாடுவேன்

            ஒவ்வொர் நாளும் நடத்தியவரைப் பாடுவேன்

 

11.       ஓதல் கற்றுத் தந்த இயேசுவைப் பாடுவேன்

            ஓங்கி நிற்க உயர்த்தியவரைப் பாடுவேன்

 

12.       ஒளவியமில்லா வாழ்ந்த இயேசுவைப் பாடுவேன்

            ஒளஷதமாம் மதுரமானவரைப் பாடுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...