24 February 2026

சிலுவையைப் பார்க்கும் பார்வை என்ன

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          சிலுவையைப் பார்க்கும் பார்வை என்ன?

            சிந்திக்கச் சொல்லும் செய்திதான் என்ன? - 2

 

                        உலகின் மானிடர் மீட்பரினிடமே

                        உலக இரட்சகரின் குருதி சிந்தி

                        ஈன சிலுவையும் சுத்தம் ஆனதே

                        புனித சின்னமாய் ஆகிப் போனதே

 

1.         அன்பும் கருணையும் நிறைந்த சிலுவை

            தியாக உருவம் சுமந்த சிலுவை - 2

            கடவுள் மனிதன் பகையைத் தீர்த்து

            ஒப்புரவாக உயர்ந்த சிலுவை - 2 - சிலுவையைப்

 

2.         ஆத்தும மரணம் நிச்சயம் என்ற

            நிலையை மாற்ற நிமிர்ந்த சிலுவை - 2

            குற்றமில்லா இரத்தம் வடிந்த சுவடால்

            குவலயம் (உலகம்) வாழ நின்ற சிலுவை - 2 - சிலுவையைப்

 

3.         நியாயத் தீர்ப்பு நாட்களில் மானிடர்

            சிலுவையில் அடிக்கப்படாமல் இருக்க - 2

            ஆண்டவர் இயேசு தம்மைத் தானே

            பலியாய் தந்து காத்த சிலுவை - 2 - சிலுவையைப்

 

 

- Eva. Dr. C. Victor

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...