28 February 2026

அன்பே உம்மை ஆராதிக்கின்றேன்

நிஜீ.கீதங்கள்:2458

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பே உம்மை ஆராதிக்கின்றேன்

                        அன்பின் கரத்தில் அர்ப்பணிக்கின்றேன்

                        அமுதமும் நீரே அமிர்தமும் நீரே

                        சுகந்தமும் நீரே சுகிர்தமும் நீரே

 

1.         அன்பில்லா நெஞ்சம் அனைத்திலும் பாழே

            பண்பில்லா வாழ்க்கை எல்லாமும் வீணே

            சகலமும் தாங்கும் சகலமும் சகிக்கும்

            அகலமும் ஆழமும் நீளமுமற்றதே

 

2.         கனிந்து கனிந்து கனி தரும் வாழ்வை

            துணிந்து துணிந்து முன் செல்லச் செய்யும்

            உவர் நீரில் வாழும் மீனினம் போல

            தவறுலகில் என்னை செவ்வையாய் நடத்தும்

 

3.         ஆவியின் வரங்கள் அனைத்தும் இருந்தும்

            அன்பின் குணங்கள் சிறிதும் குறைந்தால்

            பாவியின் குணங்கள் பரவிடச் செய்யும்

            பரமனின் சாயல் விலகிடத் தொடங்கும்

 

4.         அன்பே உம்மைப் போல் மாறிட நானும்

            ஆவலாய் தினமும் ஏங்குகின்றேன்

            உம்மைபோல் மன்னிக்க உம்மை போல் நேசிக்க

            உம் பெலன் தாரும் என் இயேசு நாதா

 

5.         அன்பில் நிறைந்து ஊழியம் செய்தால்

            அவரின் நாளில் தைரியம் பெறலாம்

            தூதர்கள் சூழகிரீடங்கள் சூடி

            தூயவர் உன்னை அழைத்து செல்வார்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...